வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான(34) இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வானது கௌரவ வடமாகாண ஆளுநர் தலைமையில் கைதடியில் உள்ள வடமாகாண பிரதம செயலாளரின் கேட்போர் கூடத்தில் இன்று 01.03.2024 காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண உள்ளுரihட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி ஆணையார், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள் , உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.