



சுயதொழில்முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் தேவைப்பாடுகளை அறிந்து வசதிப்படுத்தும் முகமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அறிவுறுத்தலுக்கமையவும் காங்கேசன்துறை நகர ஆட்டோ தரிப்பிட அனுமதிகள் தொடர்பாக 13.06.2024 ல் கலந்துரையாடல்நடைபெற்றது
நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து நடைமுறை விடயங்கள் மற்றும் வினைத்திறனான சேவை வழங்கலில் உள்ள தடைகளை நீக்குதல் தொடர்பாக சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சபையின் அனுமதிபெற்ற படவரைஞர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு இன்று 12.06.2024 சபாமண்டபத்தில் இடம்பெற்றது.
சுற்றாடல் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யா/வீமன்காமம் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு திரைக்காட்சி, துண்டுப்பிரசுரங்களினூடாக சுற்றாடல்சார் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. மேலும் மரநடுகையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றன. 12.06.2024
மல்லாகம் பகுதியில் மீளவும் டெங்கு நுளம்பின் பெருக்கம் ஆரம்பித்ததன் விளைவால் இரு நோயாளர்கள் மல்லாகம் மத்தி மல்லாகம் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 10,06,2024 நேற்றைய தினம் டெங்கு நுளம்பு உருவாவதற்கு ஏதுவான கழிவுப்பொருட்களை உடனடியாக அகற்றுமாறும் தவறும் ஆதன உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவுறுத்தல் பொதுமக்களுக்கு வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் ஒலிபெருக்கி வாகனத்தின் மூலம் வழங்கப்பட்டதுடன் இன்றைய தினம் 11.06.2024 பொதுச்சுகாதாரதுறையினருடன் இணைந்து களபரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அமைவாக. மல்லாகம் சேர்ச் லேன் , மல்லாகம் கோட்ஸ் லேன். காளிகோவில் வீதி. மல்லாகம் டிப்போ வீதி என்பன உள்ளடக்கப்பட்டன.
பயனுறுதி மிக்க நிலப்பயன்பாட்டின் ஊடாக நலம் நிறைந்த நாடு” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படும் யூன்- 05 உலக சுற்றாடல் தின நிகழ்வின் ஒருபகுதியாக பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்கு காட்சிப்பொருள், வீடியோ படம், துண்டுப்பிரசுரங்களூடாக சிந்தனைக் கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளை பொலிஸார் மற்றும் சபை உத்தியோகத்தர்களால் தெல்லிப்பளை நகரை அண்மித்தபகுதிகளில் பிளாஸ்ரிக்,பொலித்தீன் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.