நூல்கள் நடமாடும் சேவை

எமது சபையின் மல்லாகம் உபஅலுவலகத்துக்குட்பட்ட அளவெட்டி பொதுநூலகத்தினால் நடாத்தப்படும் “உங்களைத் தேடி எங்கள் நூல்கள்” எனும்
நூல்கள் நடமாடும் சேவையானது மாகியபிட்டி, அளவெட்டியில் அமைந்துள்ள NSH கல்வி நிலையத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மேற்படி கல்வி நிலையத்தில் பயிலும் தரம் 6 முதல் தரம் 11 வரையான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

கட்டிட அனுமதிகளை நிகழ்நிலையூடாக (online) அனுமதி வழங்குதல் தொடர்பான பயிற்சி

கட்டிட அனுமதிகளை எதிர்காலத்தில் நிகழ்நிலையூடாக (online) பெற்று அனுமதி வழங்கும் செயற்பாட்டிற்கு முன்னோடியாக சபை உத்தியோகத்தர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் செயன்முறை மற்றும் விளக்கமுறை பயிற்சிகள் 02.07.2024 வழங்கப்பட்டது

.

கர்ப்பிணி தாய்மார்களுக்கான மகப்பேற்றுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைய தாய் சேய் நலனினை மேம்படுத்தும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பொருளாதார நலிவுற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான மகப்பேற்றுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (2024.07.05) எமது சபையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தினுள் வசிக்கும் 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேற்றுப் பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கிரானை வீதி புனரமைப்பு

மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைய, வலிகாமம் தெற்கு – வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்கு விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தும் இணைப்பு வீதியான இக்கிரானை வீதி பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் செயற்திறன் பரிமாற்ற நிதியினூடாக புனரமைப்பு பெற்று வருகின்றது.

Translate »