தற்போது ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலைமையினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் ( வெள்ள நிலைமை, வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்தல், மின்சாரக் கம்பங்கள் சாய்தல், இடப்பெயர்வு போன்றன தொடர்பாக) உதவிகள் தேவைப்படின் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்பதை அறியத்தருகின்றோம்
.
நூலக அங்கத்தவர்களை புதிதாக சேர்க்கும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை அடைவினை அடைந்த வலிகாமம் வடக்கு பிரதேசசபை பொதுநூலக நூலகர்களுக்கான மற்றும் செயலாளருக்கான உள்ளூராட்சி ஆணையாளரின் கையொப்பமிட்ட பாராட்டு மெச்சுரை வட மாகாண கெளரவ ஆளுநரால் இன்று வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வின் பதிவுகள்

“உலக கழிப்பறை தினத்தினை” முன்னிட்டு 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைய “சுகாதார வசதிகளுக்கான அணுகலினை ஏற்படுத்தி கொடுத்தல்” எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடையும் முகமாக எமது சபை எல்லைக்குள் வசிக்கும் அடிப்படை சுகாதார வசதிகளற்ற ஒரு குடும்பத்திற்கு கழிப்பறை அமைப்பதற்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
