வலி வடக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள அளவெட்டி பொதுநூலகமானது 2023 ஆம் ஆண்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சிறப்பான செயலாற்றுகையை மேற்கொண்டதைப் பாராட்டி தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையினால் விருதும் பாராட்டுப்பத்திரமும் கொழும்பில் நடைபெற்ற தேசிய ரீதியிலான நிகழ்வில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ் விருது மற்றும் சான்றிதழ்களை சபை சார்பில் நூலகர் திருமதி.த.போல் சுரேஸ் பெற்றுக்கொண்டார்.



