



எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “Clean Sri Lanka” எண்ணக்கருவிற்கு அமைய நீண்ட கால திண்மக்கழிவகற்றல் நடவடிக்கை திட்டம் தயாரித்தல் மற்றும் பிரதேச திண்மக்கழிவகற்றல் மேற்பார்வை குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் Save a Life அமைப்பினருடன் 2025.02.18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபை தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர், யாழ் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக பிரதிநிதி, வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரதிநிதி,தெல்லிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிநிதி, வலிகாமம் வலயக்கல்வி அலுவலக பிரதிநிதி, மயிலிட்டி துறைமுக அதிகார சபையின் பிரதிநிதி, எமது பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், வர்த்தகர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சகல இடங்களிலுமுள்ள வறுமையை ஒழித்தல் எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கிற்கமைய (SDG 01) பெண் தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவையுடையோருக்கான நிலையான வருமானத்தினைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு சுயதொழில் ஊக்குவிப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்குதல்
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் (Law and Human Rights Center) பால், பால் நிலை சமத்துவம் தொடர்பான பயிற்சி எமது சபை உத்தியோகத்தர்களுக்கு 2025.02.05 ஆம் திகதி வழங்கப்பட்டது.
கெளரவமான மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்தல் எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஐந்து நாட்களுக்கான சுயதொழில் பயிற்சி வழங்கல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு 03.01.2025 அன்று வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது.
கெளரவமான மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்தல் எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஐந்து நாட்களுக்கான சுயதொழில் பயிற்சி வழங்கல் நிகழ்வு நேற்றைய தினம் வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைமையலுவலகத்தில் ஆரம்பமானது. (28.01.2025)
வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக சமூக அபிவிருத்தியினுள் வறுமையை ஒழித்தல், சுயதொழில் ஊக்குவிப்பதனூடாக பொருளாதாரத்தினை மேம்படுத்தல் ஆகிய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடையும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட பயனாளிகளுக்கு கோழி, கோழிக்கூடு, கோழித் தீவனம், கோழி வளர்ப்பு உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.