உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் 2019 – 2024 வரையான காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வு 2024.12.27 ஆம் திகதி பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தினூடான செயற்திட்டங்களை தரப்பட்ட கால எல்லைக்குள் பெளதிக ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் செயற்படுத்திய பிரதேச சபைகளுக்கு கெளரவ ஆளுநர் மெச்சுரை வழங்கி கெளரவித்தார். மேற்படி நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கும் மெச்சுரை வழங்கி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்தாகும்.



