வயாவிளான் பூனையன்காடு இந்து மயான அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் பொது தனியார் எண்ணக்கருவின் கீழ் மரநடுகை செயற்றிட்டமானது இன்று (25.12.2025) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வடமாகாண கெளரவ ஆளுநர் திரு.நா.வேதநாயகம் ஐயா அவர்கள் கலந்துகொண்டு மரங்களை நாட்டி வைத்ததுடன் பிரதேச செயலாளர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் பங்காளிகளாக கிறீன்லேயர் (Green Layer) அமைப்பினரும், வயாவிளான் அபிவிருத்தி சங்கத்தினரும், மயான அபிவிருத்தி சபையும் காணப்படுவதுடன் மரங்களுக்கான பராமரிப்பை பிரதேச சபையினர் மேற்கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.





