மல்லாகத்தில் மீளவும் டெங்கு நுளம்பின் பெருக்கம் ஆரம்பித்துள்ளது – பொதுமக்களுக்கு சுகாதார துறையினர் எச்சரிக்கை

மல்லாகம் பகுதியில் மீளவும் டெங்கு நுளம்பின் பெருக்கம் ஆரம்பித்ததன் விளைவால் இரு நோயாளர்கள் மல்லாகம் மத்தி மல்லாகம் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக  10,06,2024 நேற்றைய தினம் டெங்கு நுளம்பு உருவாவதற்கு ஏதுவான கழிவுப்பொருட்களை உடனடியாக அகற்றுமாறும் தவறும் ஆதன உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவுறுத்தல் பொதுமக்களுக்கு வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் ஒலிபெருக்கி வாகனத்தின் மூலம் வழங்கப்பட்டதுடன் இன்றைய தினம் 11.06.2024 பொதுச்சுகாதாரதுறையினருடன் இணைந்து களபரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அமைவாக. மல்லாகம் சேர்ச் லேன் , மல்லாகம் கோட்ஸ் லேன். காளிகோவில் வீதி. மல்லாகம் டிப்போ வீதி என்பன உள்ளடக்கப்பட்டன.

Translate »