கழிவுப் பொருட்களை காசாக்குங்கள். 25 வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கி வைப்பு

கழிவுப் பொருட்களை காசாக்குங்கள்.
25 வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கி வைப்பு
*********
திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை வினைத்திறனாக்கவும் கழிவு பொருட்களை மீள்சுழற்சி செய்யும் முகமாக பொதுமக்களை ஊக்குவிக்கும் பொருட்டும் மல்லாகத்தில் எம்மால் நிறுவப்பட்டுள்ள “பெறுமதி” மீள்சுழற்சிப் பொருட்கள் கொள்வனவு நிலையத்தில் பொதுமக்களிடமிருந்து மீள்சுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்கள் பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்படுகின்றது. குறித்த நிலையத்தில் பிளாஸ்ரிக், பிளாஸ்ரிக் போத்தல்கள், கடதாசிப் பொருட்கள், பியர் ரின், காட்போட், தகரம், பொலித்தீன், கண்ணாடிப் பொருட்கள், சில்வர், ரயர் போன்ற மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுப்பொருட்களை வழங்க முடியும். அவ்வாறு பொருட்களை வழங்கும் “பெறுமதி” நிலைய வாடிக்கையாளர்களுக்கு சபையினால் குறித்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் முழுத்தொகையினையும் வழங்குவதற்கு கெளரவ ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் எம்மால் இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த வருட வாடிக்கையாளர்கள் 25 பேருக்கான கொடுப்பனவு எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த வாடிக்கையாளர்களில் அதிக பெறுமதியான பொருட்களை வழங்கிய முதல் மூன்று வாடிக்கையாளர்கள் (யா/யூனியன் கல்லூரி உட்பட) பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
ஏனைய பொதுமக்களும் இவ்வாறு மீள்சுழற்சிப் பொருட்களை வழங்குவதன் மூலம் குறித்த நிலையத்தின் செயற்பாட்டினை மேம்படுத்தி வினைத்திறனான கழிவு முகாமைத்துவத்திற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Translate »