உள்ளூராட்சி மாநாடும் கண்காட்சியும் விருது வழங்கல் விழாவும்

உள்ளூராட்சி மாநாடும் கண்காட்சியும் விருது வழங்கல் விழாவும் எதிர்வரும் 14.03.2025 அன்று யா மகாஜனாக்கல்லூரி மண்டப்பத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கழிவுப் பொருட்களை காசாக்குங்கள். 25 வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கி வைப்பு

கழிவுப் பொருட்களை காசாக்குங்கள்.
25 வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கி வைப்பு
*********
திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை வினைத்திறனாக்கவும் கழிவு பொருட்களை மீள்சுழற்சி செய்யும் முகமாக பொதுமக்களை ஊக்குவிக்கும் பொருட்டும் மல்லாகத்தில் எம்மால் நிறுவப்பட்டுள்ள “பெறுமதி” மீள்சுழற்சிப் பொருட்கள் கொள்வனவு நிலையத்தில் பொதுமக்களிடமிருந்து மீள்சுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்கள் பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்படுகின்றது. குறித்த நிலையத்தில் பிளாஸ்ரிக், பிளாஸ்ரிக் போத்தல்கள், கடதாசிப் பொருட்கள், பியர் ரின், காட்போட், தகரம், பொலித்தீன், கண்ணாடிப் பொருட்கள், சில்வர், ரயர் போன்ற மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுப்பொருட்களை வழங்க முடியும். அவ்வாறு பொருட்களை வழங்கும் “பெறுமதி” நிலைய வாடிக்கையாளர்களுக்கு சபையினால் குறித்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் முழுத்தொகையினையும் வழங்குவதற்கு கெளரவ ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் எம்மால் இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த வருட வாடிக்கையாளர்கள் 25 பேருக்கான கொடுப்பனவு எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த வாடிக்கையாளர்களில் அதிக பெறுமதியான பொருட்களை வழங்கிய முதல் மூன்று வாடிக்கையாளர்கள் (யா/யூனியன் கல்லூரி உட்பட) பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
ஏனைய பொதுமக்களும் இவ்வாறு மீள்சுழற்சிப் பொருட்களை வழங்குவதன் மூலம் குறித்த நிலையத்தின் செயற்பாட்டினை மேம்படுத்தி வினைத்திறனான கழிவு முகாமைத்துவத்திற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

சபைநிதி மூலம் அமைக்கப்பட்ட கீரிமலை தீர்த்தக்கரைமண்டப முன்மேடை

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பராமரிப்பில் உள்ள கீரிமலை தீர்த்தக்கரை மற்றும் புனித சுற்றுலத்தல பிரதேசத்தின் புனிதத்தை மேம்படுத்தும் நோக்கில் கடற்கரை பகுதிகளை அழகாக்கும் திட்டத்தின் அடிப்படையில் சபைநிதி மூலம் அமைக்கப்பட்ட மண்டப முன்மேடை மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்படுகின்றது.
கீரிமலையின் புனிதத்தை தொடர்ந்தும் பேணவும் மேலதிக அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் சபை உறுதியாகவுள்ளதுடன் சேதங்கள் ஏற்படாது சுத்தமாக பேண பொதுமக்களின் பொறுப்புணர்வும் ஒத்துழைப்பும் பெரிதும் வேண்டப்படுகிறது.

“Clean Sri Lanka”நடவடிக்கை திட்டம் தயாரித்தல்தொடர்பான கலந்துரையாடல்

எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “Clean Sri Lanka” எண்ணக்கருவிற்கு அமைய நீண்ட கால திண்மக்கழிவகற்றல் நடவடிக்கை திட்டம் தயாரித்தல் மற்றும் பிரதேச திண்மக்கழிவகற்றல் மேற்பார்வை குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் Save a Life அமைப்பினருடன் 2025.02.18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபை தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர், யாழ் மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக பிரதிநிதி, வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரதிநிதி,தெல்லிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிநிதி, வலிகாமம் வலயக்கல்வி அலுவலக பிரதிநிதி, மயிலிட்டி துறைமுக அதிகார சபையின் பிரதிநிதி, எமது பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், வர்த்தகர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாழ்வாதார உதவிகள் வழங்குதல்

சகல இடங்களிலுமுள்ள வறுமையை ஒழித்தல் எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கிற்கமைய (SDG 01) பெண் தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவையுடையோருக்கான நிலையான வருமானத்தினைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு சுயதொழில் ஊக்குவிப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்குதல்

பால் நிலை சமத்துவம் தொடர்பான பயிற்சி

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் (Law and Human Rights Center) பால், பால் நிலை சமத்துவம் தொடர்பான பயிற்சி எமது சபை உத்தியோகத்தர்களுக்கு 2025.02.05 ஆம் திகதி வழங்கப்பட்டது.

சுயதொழில் பயிற்சி வழங்கல்

கெளரவமான மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்தல் எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஐந்து நாட்களுக்கான சுயதொழில் பயிற்சி வழங்கல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு 03.01.2025 அன்று வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது.

கட்டிட விண்ணப்பங்களை நிகழ்நிலை மூலம் செயற்படுத்துவது தொடர்பாக பயிற்சி வகுப்பு

கட்டிட விண்ணப்பங்களை நிகழ்நிலை மூலம் பெறுவது தொடர்பில் பயிற்சி வகுப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எமது சபை உத்தியோகத்தர்களுக்கு 2025.01.29 ஆம் திகதி வழங்கப்பட்டது.
விரைவில் வலிவடக்கு பிரதேசசபை நிகழ்நிலை ஊடாக விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து அனுமதி வழங்கும் செயல்திட்டத்தை அமுல்படுத்தவுள்ளது.

சுயதொழில் பயிற்சி வழங்கல் நிகழ்வு

கெளரவமான மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்தல் எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஐந்து நாட்களுக்கான சுயதொழில் பயிற்சி வழங்கல் நிகழ்வு நேற்றைய தினம் வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைமையலுவலகத்தில் ஆரம்பமானது. (28.01.2025)

வறுமைக்கோட்டிற்குட்பட்ட பயனாளிகளுக்கு உபகரணங்கள்வழங்கி வைப்பு

வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைவாக சமூக அபிவிருத்தியினுள் வறுமையை ஒழித்தல், சுயதொழில் ஊக்குவிப்பதனூடாக பொருளாதாரத்தினை மேம்படுத்தல் ஆகிய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடையும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட பயனாளிகளுக்கு கோழி, கோழிக்கூடு, கோழித் தீவனம், கோழி வளர்ப்பு உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.

Translate »