பொதுமக்கள் பங்களிப்புடனான கிராமத்தை சுத்தமாக வைத்திருக்கும் செயல்திட்டம் -2

பொதுமக்கள் பங்களிப்புடனான கிராமத்தை சுத்தமாக வைத்திருக்கும் செயல்திட்டம் -2
எமது சூழலை சுத்தமாக பேணுதல் எனும் எண்ணக்கருவிற்கமைய வட்டாரம் 4 தையிட்டி கிராமத்தில் 2024-12-21 மற்றும் 2024-12-22 ஆம் திகதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் சபை பணியாளர்களும் இணைந்து கிராம வீதிகளை சுத்தம் செய்யும் செயற்பாடு இடம்பெற்றது.

பொதுமக்கள் பங்களிப்புடன் கிராமத்தை சுத்தமாக வைத்திருக்கும் செயல்திட்டம் – 01

பொதுமக்கள் பங்களிப்புடன் கிராமத்தை சுத்தமாக வைத்திருக்கும் செயல்திட்டம் – 01
எமது சூழலை சுத்தமாக பேணுதல் எனும் எண்ணக்கருவிற்கமைய மல்லாகம் வீரபத்திரர் ஆலய தொண்டர் சபை, பிரதேச சபை பணியாளர்கள் மற்றும் ஊர்மக்கள் இணைந்து வட்டாரம் 21, J/ 212 கிராம சேவகர் பிரிவில் உள்ள பங்களா வீதியின் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். இதில்
முதற் கட்டமாக கே.கே.எஸ் வீதியில் இருந்து வீரபத்திரர் ஆலயம் வரையான பகுதியில் சிரமதானப்பணி 2024.12.22 அன்று நடைபெற்றது.

பாராட்டி கௌரவிப்பு

வலி வடக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள அளவெட்டி பொதுநூலகமானது 2023 ஆம் ஆண்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சிறப்பான செயலாற்றுகையை மேற்கொண்டதைப் பாராட்டி தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையினால் விருதும் பாராட்டுப்பத்திரமும் கொழும்பில் நடைபெற்ற தேசிய ரீதியிலான நிகழ்வில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ் விருது மற்றும் சான்றிதழ்களை சபை சார்பில் நூலகர் திருமதி.த.போல் சுரேஸ் பெற்றுக்கொண்டார்.
 

2025 ஆம் ஆண்டிற்கான வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை பதிவு செய்தல்

தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான வழங்குநர்மற்றும் ஒப்பந்ததாரர்களை பதிவுசெய்ய  கோரப்பட்டுள்ளது

சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தேசிய ரீதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் எமது சபைக்கு இணக்கப்பாட்டிற்கான சான்றிதழ் (Certificate of Compliance) வழங்கி கெளரவிக்கப்பட்ட நிகழ்வு 2023.12.02 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. குறித்த சான்றிதழினை சபையின் செயலாளர் சார்பில் நிதி உதவியாளர் / கணக்குப்பகுதி தலைவர் பெற்றுக்கொண்டார்.

தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வும் பரிசோதனை முகாம்

தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வும் பரிசோதனை முகாம்
17.12.2024 இன்று சபை பணியாளர்களின் நன்மை கருதி சபையின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் அவரது குழுவால் சபை மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்தும் வழங்கப்பட்டது.
 

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட (வரைபு) பொதுமக்களின் பார்வைக்கு சமர்ப்பித்தல்

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட (வரைபு) பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Translate »