2025 ஆம் ஆண்டின்கடமைகள் வைபவ ரீதியாகஆரம்பிக்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டின் முதலாவது வேலைநாளில் வைபவ ரீதியாக கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அரசின் “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டத்தில் சபையின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பான சேவைக்கு சத்தியப்பிரமாணத்துடன் உறுதி எடுக்கப்பட்டது.

தனியார் பங்களிப்பின் அடிப்படையில் கற்றல் உபகரணங்கள்வழங்கிவைப்பு

சபையின் பணியாளர்களின் குடும்ப நலநோம்பின் அடிப்படையில் கல்விகற்கும் பிள்ளைகளுக்கு (30 மாணவர்கள்) தனியார் பங்களிப்பின் அடிப்படையில் ஏ.வி.ஆர். அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் அவ் அறக்கொடை பணிப்பாளர் திரு. திருமதி. சிவகுமாரன் அவர்களால் ஒளிவிழாவை அர்த்தப்படுத்தும் முகமாக நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது

சுற்றாடல் உரிமம் வழங்குதல் தொடர்பான பயிற்சி

சுற்றாடல் உரிமம் வழங்குதல் தொடர்பான தற்போதைய நடைமுறைகள் தொடர்பில் கையேடு வழங்கலும் பயிற்சியும் சபை உத்தியோகத்தர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தரால் இன்று வழங்கப்பட்டது

பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வு

உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் 2019 – 2024 வரையான காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வு 2024.12.27 ஆம் திகதி பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தினூடான செயற்திட்டங்களை தரப்பட்ட கால எல்லைக்குள் பெளதிக ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் செயற்படுத்திய பிரதேச சபைகளுக்கு கெளரவ ஆளுநர் மெச்சுரை வழங்கி கெளரவித்தார். மேற்படி நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கும் மெச்சுரை வழங்கி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்தாகும்.

டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்

வலிவடக்கு பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் கருகம்பனை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் இன்று (29.12.2024) இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்.
பங்குபற்றிய யாவர்க்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
இளையோர் இணைந்து இவ்வாறு செயற்படும்போது சமூகப்பொறுப்பு சமூக பெறுமதி உணரப்படுமென்பது உறுதி

மக்கள் பங்களிப்புடனான செயற்திட்டம்

மக்கள் பங்களிப்புடனான செயற்திட்டம்
மயிலிட்டித்துறை வடக்கு J/251 கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீதிகளுக்கான பெயர்ப்பலகை இடும் செயற்திட்டம் பிரதேச சபையின் வழிகாட்டல் மற்றும் அனுமதிக்கமைவாக மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்தி சங்கமும் பொதுமக்களும் இணைந்து அவர்களின் நிதிப்பங்களிப்பில் இத்திட்டத்தை முன்னுதாரணமாகவும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்கள்.
வாழ்த்துக்களும் நன்றிகளும்

மரநடுகை செயற்றிட்டம்

வயாவிளான் பூனையன்காடு இந்து மயான அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் பொது தனியார் எண்ணக்கருவின் கீழ் மரநடுகை செயற்றிட்டமானது இன்று (25.12.2025) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வடமாகாண கெளரவ ஆளுநர் திரு.நா.வேதநாயகம் ஐயா அவர்கள் கலந்துகொண்டு மரங்களை நாட்டி வைத்ததுடன் பிரதேச செயலாளர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் பங்காளிகளாக கிறீன்லேயர் (Green Layer) அமைப்பினரும், வயாவிளான் அபிவிருத்தி சங்கத்தினரும், மயான அபிவிருத்தி சபையும் காணப்படுவதுடன் மரங்களுக்கான பராமரிப்பை பிரதேச சபையினர் மேற்கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மாபெரும் #டெங்கு_ஒழிப்பு 🚫🦟🚫நடவடிக்கை
கருகம்பனை பொது அமைப்புகள் மற்றும் விதையயனைத்தும் விருட்சமே, செயற்றிட்டமும் இணைத்து வலி வடக்கு பிரதேச சபையுடன் அனுசரணையோடு எதிர்வரும் #சனிக்கிழமை 28.12.2024 காலை 8 மணி முதல் கருகம்பனை கிராமத்தில் உள்ளடக்கிய பகுதிகளான #நகுலேஸ்வரம் கிராம சேவையாளர் பிரிவு #இளவாலை வடக்கு, கிராம சேவையாளர் பிரிவு ,இளவாலை வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவு, வித்தகபுரம் கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இளைஞர்கள் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட உறுப்பினர்கள், கிராமத்தவர்கள் பொது சுகாதார பரிசோதகர், பொலிசார் வலி வடக்கு பிரதேச சபை ஊழியர்களுடன் பொதுஇடங்களில் சிரமதானம் செய்யப்படவுள்ளது இதனை விட வீடுகளில் இருக்கின்ற #நுளம்புகள் பரவக்கூடிய பொருட்களை வீதிகளில் பொதியிட்டு தரம் பிரித்து வைக்கவும் இதனை பிரதேச சபை வாகனத்தின் உதவியுடன் அகற்றப்படவுள்ளது எனவே அனைவரும் #டெங்கு நோயினால் இருந்து எம்மை பாதுகாக்க முன்வாருங்கள் எங்கள் செயற்றிட்ட தத்துக்கு உங்கள் பூரண ஆதரவை எதிர்பாக்கின்றோம்❤️
தொடர்புகளுக்கு 0773241755
Translate »