பாராட்டு மெச்சுரை நிகழ்வு

நூலக அங்கத்தவர்களை புதிதாக சேர்க்கும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை அடைவினை அடைந்த வலிகாமம் வடக்கு பிரதேசசபை பொதுநூலக நூலகர்களுக்கான மற்றும் செயலாளருக்கான உள்ளூராட்சி ஆணையாளரின் கையொப்பமிட்ட பாராட்டு மெச்சுரை வட மாகாண கெளரவ ஆளுநரால் இன்று வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வின் பதிவுகள்

நிதிஉதவி வழங்கல்

“உலக கழிப்பறை தினத்தினை” முன்னிட்டு 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைய “சுகாதார வசதிகளுக்கான அணுகலினை ஏற்படுத்தி கொடுத்தல்” எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடையும் முகமாக எமது சபை எல்லைக்குள் வசிக்கும் அடிப்படை சுகாதார வசதிகளற்ற ஒரு குடும்பத்திற்கு கழிப்பறை அமைப்பதற்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

பிரியாவிடை நிகழ்வு

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் கீழ் இயங்கும் நெய்தல் முன்பள்ளியில் கல்வி கற்று 2025 ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டிற்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு 2024.11.20 ஆம் திகதிஇடம்பெற்றது .

நிறுக்கும் அளக்கும் உபகரணங்கள் சரிபார்த்தல் மற்றும் முத்திரை பதித்தல் நடவடிக்கை

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் எல்லைக்குள் வர்த்தக நடவடிக்கையினை மேற்கொள்கின்ற அனைவரும் தங்கள் நிறுக்கும் , அளக்கும் உபகரணங்களை சரிபார்த்து முத்திரை இட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
பின்வரும் இடங்களில் பின்வரும் கால ஒழுங்கில் நடைபெற உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் குறித்த செயற்பாட்டினை மேற்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

2024.09.04 மல்லாகம் உப அலுவலகம்
2024.09.05 மயிலிட்டி உப அலுவலகம்
2024.09/06.09.10 தெல்லிப்பளை உப அலுவலகம்

வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சத்திர சிகிச்சை

வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றால்  நாய்களுக்கான இலவச கருத்தடை சத்திர சிகிச்சை மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான பதிவு என்பன  தெல்லிப்பளை பொதுச்சுகாதார பிரிவிற்குட்பட்ட பின்வரும் இடங்களில் முன்னெடுக்கப்பட்டன.
🔸️ சித்தியம்புளியடி, கலைவாணி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில்
🔸️ கட்டுவன் மேற்கு, வள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு அருகாமையில்
🔸️ சோலையவளவு வைரவர் ஆலய வளாகத்திற்கு அருகாமையில்
🔸️ துர்க்காபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகாமையில்
அளவெட்டி தெற்கு, கலைவாணி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில்
🔸️ அளவெட்டி மேற்கு விக்னேஸ்வரா சனசமூக நிலையத்திற்கு அருகாமையில்
மாவைகலட்டி பொதுநோக்கு மண்டபத்திற்கு அருகாமையில்
🔸️ கொல்லங்கலட்டி கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகாமையில்
🔸️ ஆலடி சந்திக்கு அருகாமையில்
🔸 ️வசந்தபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகாமையில்
🔸 ️இளவாலை வைத்தியசாலைக்கு அருகாமையில்
கல்லாரை வளர்மதி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில்
🔸️மல்லாகம் பெரிய தம்பிரான் ஆலயத்திற்கு அருகாமையில்
🔸️குளமங்கால் தேவாலயத்திற்கு அருகாமையில்
🔸️நீதிமன்ற வீதி, சன்மார்க்க சனசமூக நிலையத்திற்கு அருகாமையில்

இணையப் பாதுகாப்பு மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான செயலமர்வு

தெல்லிப்பளை பொதுநூலக டிஜிட்டல் அறிவு மைய செயற்றிட்ட அடிப்படையில் வலிவடக்கு பிரதேச சபையுடன் இணைந்து ஆளுகைக்கான புத்தாக்க மையத்தினால் (CGI) இணையப் பாவனை, இணையப் பாதுகாப்பு மற்றும் அதன் விளைவுகள் தொடர்பாக சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நடாத்தப்பட்ட தகவல் பகிர்வு அமர்வு இன்று (12.08.2024) சபை தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது.

உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வாய்ப்பு

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்தினூடாக பிரதி வெள்ளிக்கிழமைகளில் “கோடிலியா குறூஸ்” எனும் சொகுசுக்கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வரும் சுற்றுலாவிகளின் வசதி கருதியும் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வசதியினை ஏற்படுத்தும் முகமாகவும் எமது சபையால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளின் பதிவு ஒர் ஆவணப்படுத்தலாக பதிவிடப்படுவதுடன் சுயதொழில் உற்பத்தியாளர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த வசதியேற்படுத்தப்படுமென்ற தகவலையும் அறியத்தருகின்றோம்.

வழிகாட்டிக் கையேடுகள் வழங்கி வைப்பு

வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை பொது நூலகத்தால் இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்கக்கூடிய இடங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சுற்றுலா வழிகாட்டிக் கையேடுகள் வழங்கப்பட்டபோது.

உள்ளூராட்சி மன்றங்களிற்கிடையே நடைபெற்ற செயற்திறன் மதிப்பீட்டு போட்டியில் வலி வடக்கு பிரதேச சபை தேசிய ரீதியாக இரண்டாம் இடம் பெற்று வெள்ளி விருதை பெற்றுக் கொண்டது

2024 National Perfomance Assessment of Local Authorities in Sri Lanka (key findings from the PERFECT 2.0 Survey)
தேசிய ரீதியாக உள்ளூராட்சி மன்றங்களில் நடைபெற்ற செயற்திறன் மதிப்பீடு 2024 இல் வலி வடக்கு பிரதேச சபை 663.75 புள்ளிகளுடன் தேசிய ரீதியாக இரண்டாம் இடம் பெற்று வெள்ளி விருதை பெற்றுக்கொண்டதுடன் வேறுபட்ட நான்கு விடயங்களில் உயர் செயற்திறனுக்காக மூன்று விருதுகளையும் பெற்றுக் கொண்டது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கெளரவ பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் இவ் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் விருது வலி வடக்கு பிரதேச சபை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். இவ் அடைவிற்கு உழைத்த சபை உத்தியோகத்தர்கள் அனைவரிற்கும் செயலாளர் நன்றிதெரிவித்தார்.
Translate »